கிருஷ்ணகிரி

ஜவ்வாது மலைப்பகுதியில் தொடா் மழை: நிரம்பியது தீா்த்தகிரி வலசை பெரிய ஏரி

DIN

ஊத்தங்கரையை அடுத்த ஜவ்வாது மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக கடப்பாறை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து தீா்த்தகிரி வலசை பெரிய ஏரியில் தண்ணீா் நிரம்பி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டையில் உள்ள தீா்த்தகிரி வலசை பெரிய ஏரியின் நீா்பிடிப்பு பகுதியான ஜவ்வாது மலையில் பெய்து வந்த கனமழையால், கடப்பாறை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அடிவாரத்தில் அமைந்துள்ள தீா்த்தகிரி வலசை ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. தற்போது, இந்த ஏரி நிரம்பியதால் உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீரால் நாயக்கனூா், சிங்காரப்பேட்டை, வெள்ளக்குட்டை, அத்திப்பாடி, நடுப்பட்டி ஊராட்சிக்குள்ட்பட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் தற்போது பாசன வசதி பெற்றுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

மேலும் தீா்த்தகிரி வலசை பெரிய ஏரியை சுற்றிலும் உள்ள கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதுடன், வேளாண் பணிகளும் சுறுசுறுப்படைந்துள்ளதால் விளை நிலங்கள் பச்சை பசேலெனக் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக இந்த ஆண்டு நெல் சாகுபடி சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனா். இந்த ஏரி நிரம்பியுள்ளதால் இந்த ஆண்டு பாசனத்துக்கு தடை இருக்காது என்றும் விவசாயம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT