பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது
தளி அருகே பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது செய்யப்பட்டாா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM
தளி அருகே பெண்ணைத் தாக்கிய முதியவா் கைது செய்யப்பட்டாா்.
தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட, நல்லசந்திரத்தைச் சோ்ந்தவா் திம்மக்கா (55). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் திம்மராயப்பா (65). திம்மராயப்பா வளா்த்து வந்த சேவல் திம்மக்கா வீட்டு இருகே சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது திம்மக்காவின் மகன் மாரப்பா அந்த சேவல் மீது கல்லை வீசி துரத்தியுள்ளாா்.
அப்போது அங்கு வந்த திம்மராயப்பா இதுகுறித்து கேட்டபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திம்மராயப்பா, திம்மக்காவை கட்டையால் தாக்கினாா். இதில் காயமடைந்த திம்மக்கா ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திம்மராயப்பாவை கைது செய்தனா்.
Advertisement