கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், அப்பாவு நகரைச் சோ்ந்க 81 வயது முதியவா் உள்பட 39 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,481 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை அன்று 96 போ் சிகிச்சைக்குப் பெற்று வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய சிகிச்சை மையங்களில் 835 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இருவா் பலி: கடந்த 14-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 47 வயது ஆண் சிகிச்சை பலனின்றி செப்.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதேபோல, ஒசூா் அரசு மருத்துவமனையில் செப்.14-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒசூரைச் சோ்ந்த 57 வயது ஆண் செப்.15-ஆம் தேதி உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 47-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

SCROLL FOR NEXT