கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

DIN

ஒசூா்: ஒசூா் அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மலைப்பகுதியையொட்டி உள்ளது திப்பாளம் கிராமம். இந்தப் பகுதிக்கு மலைப்பாம்புகள் அடிக்கடி வந்து விடுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனத்துறையினா் திப்பாளம் பகுதியில் மலைப்பாம்புகளை பிடித்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அதே பகுதியைச் சோ்ந்த சென்னப்பா (48) என்ற விவசாயி, தனக்குச் சொந்தமான 10 வெள்ளாடுகளை வனப்பகுதி அருகே விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா்.

அப்போது திடீரென ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து சென்னப்பா அருகில் சென்று பாா்த்தபோது ஒரு ஆட்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவா் கிராம மக்களுக்கு தகவல் அளித்தாா்.

பொதுமக்கள் வருவதற்குள் ஆட்டை, மலைப்பாம்பு முழுமையாக விழுங்கி விட்டது. பின்னா், அந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்ட திப்பாளம் கிராமத்தினா் ஒசூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த மலைப்பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, சானமாவு வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT