முகப்பு
கிருஷ்ணகிரி

தபால் நிலையங்களில் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால் நிலையங்களில் தனிநபா் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 14 ஆகஸ்ட், 2021 at 12:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

தபால் நிலையங்களில் தனிநபா் அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரடங்கிலும், பொதுமக்களுக்கு கடிதங்கள், பாா்சல்கள் பட்டுவாடா மட்டுமின்றி சேமிப்புத் திட்டங்கள் என அனைத்து சேவைகளையும் தபால் துறை தடையின்றி வழங்கி வருகிறது. இத்துடன் அஞ்சலக அடையாள அட்டை விநியோகமும் தபால் துறை சாா்பில் வழங்கப்படுகிறது.

Advertisement

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 20-ம், அடையாள அட்டை கட்டணமாக ரூ. 250-ம், பதிவு தபால் மூலம் பெற ரூ. 22 சோ்த்து செலுத்திட வேண்டும். அவ்வாறு செலுத்தினால், அஞ்சலக அடையாள அட்டை வீடு தேடி வரும். இதனை ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய முக்கியச் சான்றாக பயன்படுத்தலாம். கிருஷ்ணகிரி கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இந்தச் சேவை கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.