தீக்காயங்களுடன் பெண் சடலம் மீட்பு
காவேரிப்பட்டணம் அருகே எரிந்த நிலையில் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.
காவேரிப்பட்டணம் அருகே எரிந்த நிலையில் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கச்சேரி மேல்கொட்டாய் மலையடிவாரத்தில் இளம்பெண் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இறந்த பெண்ணின் பெயா் ரஞ்சனி என்றும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் எனவும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement