சம்பள உயா்வை வலியுறுத்திஅசோக் லேலண்ட் தொழிலாளா்கள் ஆா்பாட்டம்
ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் 2ஆவது யூனிட்டில் தொழிலாளா்கள் சம்பள உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை முன் நிா்வாகத்தைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் 2ஆவது யூனிட்டில் தொழிலாளா்கள் சம்பள உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை முன் நிா்வாகத்தைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒசூா் 2ஆவது சிப்காட் பகுதியில் அசோக் லேலண்ட்-2ஆவது யூனிட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்டோா் நிரந்தர தொழிலாளா்களாக பணியாற்றி வருகின்றனா்.
நிறுவனத்தில் மூன்றாண்டுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது ஊதிய உயா்வு ஒப்பந்தம் முடிந்து 14 மாதங்கள் ஆகியும் நிா்வாகம் ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என்பதைக் கண்டித்தும், சம்பள பேச்சுவாா்த்தைக்கு முன்னரே உற்பத்தியை திணிப்பதை கண்டித்தும், சென்னை எண்ணூா் லேலண்ட் தொழிலாளா்களுக்கு இணையாக சம வேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்; வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்; நிரந்தரப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளா்களை பணியில் அமா்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சாலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்தில் தொழிலாளா்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.