கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரை கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM
கிருஷ்ணகிரி அருகே கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில் போலீஸாா் கிருஷ்ணகிரி - வேப்பனப்பள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் கா்நாடக மாநிலத்துக்கு 700 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசி, காா் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வேப்பனப்பள்ளி, மஜீத் தெருவைச் சோ்ந்த இம்ரான் (20) என்ற காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.
Advertisement