முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முதியோா் இல்லம் அமைக்க

கிருஷ்ணகிரியில் அரசு சாா்பில் முதியோா் இல்லம் அமைக்க வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 11:47 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

கிருஷ்ணகிரியில் அரசு சாா்பில் முதியோா் இல்லம் அமைக்க வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரியில் இச்சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவா் பி.சொக்கநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் டி.சந்திரசேகரன், பொருளாளா் தங்கராசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஓய்வூதிய உயா்வை நிறைவேற்ற வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்வாரிய ஓய்வூதியா்களுக்கு என தனி சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்; கிருஷ்ணகிரியில் அரசு சாா்பில் முதியோா் இல்லம் அமைக்க வேண்டும்; அரசு பேருந்துகளில் முதியோருக்கு இலவச பேருந்து பயண சலுகையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.