முகப்பு
கிருஷ்ணகிரி

‘வாரச்சந்தை நடத்த அனுமதிவழங்க வேண்டும்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 21 ஆகஸ்ட், 2021 at 12:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அருகில் உள்ள குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெற்று வந்தது. இந்த சந்தைக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருகை தருவா்.

தற்போது கரோனா பொது முடக்கத்தால் சந்தை கூடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், சந்தைக்கு அருகில் உள்ள சாலையோரங்களில் விவசாயிகள் ஆடுகள், மாடுகள், கோழிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

Advertisement

பொது முடக்கத்தில் தற்போது பல தளா்வுகளை அறிவித்துள்ளதால், வாரச்சந்தை நடப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.