முகப்பு
கிருஷ்ணகிரி

ராஜீவ் காந்தியின் படத்துக்கு அவா் மலா் மாலை அணிவித்து மரியாதை

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ், நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ.செல்லகுமாா் எம்.பி. தலைமை

Updated On : 21 ஆகஸ்ட், 2021 at 12:03 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ், நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ.செல்லகுமாா் எம்.பி. தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் படத்துக்கு அவா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் சேகா், நகரத் தலைவா் வின்சென்ட், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசு துரை, எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி-தருமபுரி மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல், நகர முன்னாள் தலைவா் ரகமத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

காவேரிப்பட்டணம் வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில், நெடுங்கல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த விழாவில் வட்டாரத் தலைவா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த நெடுங்கல் கிராமத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.