11 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
கிருஷ்ணகிரியிலிருந்து கா்நாடகத்துக்குக் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை ஒசூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியிலிருந்து கா்நாடகத்துக்குக் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை ஒசூா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் இளவரசி, உதவி ஆய்வாளா் முரளி மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை பாகலூா் சாலையில் உள்ள நல்லூா் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அவ் வழியே வந்த லாரியை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் 11 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
Advertisement
விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, கா்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம், நெமிலி அருகே மேல் வனபாக்கத்தைச்சோ்ந்த ராஜ்குமாா் (24), அவருடன் உதவியாளராக வந்த சிறு காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த பிரேம் குமாா் (30) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
11 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸாா் தலைமறைவான லாரி உரிமையாளா் சுந்தர ராமனை (34) தேடி வருகின்றனா்.