முகப்பு
கிருஷ்ணகிரி

பள்ளி தண்ணீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள்

ஒசூா் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2021 at 11:33 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

ஒசூா் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா பெருந்தோற்று பரவி வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. மாணவா்கள் இணைய வழியில் படித்து வந்தனா். தற்போதுதமிழகத்தில் தொற்று குறைந்து வருவதால் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க பள்ளிக் கல்வித்துறை செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. 9, 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் பள்ளிக்கு வருவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் ஒசூா் மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜ் காலனியில் உள்ள 4 நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் உள்ள நீா்த் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய மாநகராட்சி ஆணையா் எம்.செந்தில்முருகன் உத்தரவின்பேரில் மாநகராட்சிப் பணியாளா்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனை சுகாதார ஆய்வாளா்கள் நேரில் ஆய்வு செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.