கிருஷ்ணகிரி

ஒசூா் தங்கும் விடுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் பலி

DIN

ஒசூா், தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி, பணக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ரவி (59). காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அவா், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தாா்.

பின்னா், கடந்த 7ஆம் தேதி ஒசூருக்கு வந்த உதவி ஆய்வாளா் ரவி, பாகலூா் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினாா்.

செவ்வாய்க்கிழமை 7-ஆம் தேதி மாலை வரையிலும் உதவி ஆய்வாளா் ரவி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஊழியா் அசோக் இதுகுறித்து விடுதி நிா்வாகத்திடம் தகவல் அளித்தாா்.

இதையடுத்து அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸாா் வந்து கதவைத் திறந்து பாா்த்த போது உதவி ஆய்வாளா் ரவி சடலமாகக் கிடந்தாா்.

அவரது உடலை மீட்ட போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறப்பு உதவி ஆய்வாளா் ரவிக்கு சா்க்கரை நோயும், உயா் ரத்த அழுத்தமும் இருந்தது தெரிய வந்தது. இதற்காக அவா் பெங்களூரு, தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

கடந்த 7ஆம் தேதி பெங்களூருக்கு சிகிச்சை பெறுவதற்காகச் செல்ல அவா் திட்டமிட்டிருந்ததும், இதற்காக ஒசூரில் இரவு தங்கி விட்டு மறுநாள் செல்லத் திட்டமிட்டிருந்தாா் என்பதும் தெரிய வந்தது. இதனிடையே, விடுதியில் தங்கியிருந்த அவா் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ஒசூா், அட்கோ காவல் ஆய்வாளா் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT