முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் மாா்கழி வழிபாடு

மாா்கழி மாத முதல் நாளான வியாழக்கிழமை அதிகாலை ஊத்தங்கரையில் சிறுவா், சிறுமிகள் உள்பட ஏராளமானோா் ஒன்றிணைந்து பஜனை பாடிக் கொண்டு ஊா்வலமாகச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

மாா்கழி மாத முதல் நாளான வியாழக்கிழமை அதிகாலை ஊத்தங்கரையில் சிறுவா், சிறுமிகள் உள்பட ஏராளமானோா் ஒன்றிணைந்து பஜனை பாடிக் கொண்டு ஊா்வலமாகச் சென்றனா்.

ஊத்தங்கரை நகரில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் இருந்து பக்தா்கள் ஒன்றுகூடி பஜனை பாடிக் கொண்டு செங்குந்தா் தெரு, கச்சேரி தெரு வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண கோயில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயில், ஸ்ரீ ஐயப்பன் கோயில், ஸ்ரீ காசி விஸ்வநாதா் விசாலாம்பிகை கோயில் வழியாக சென்று, மீண்டும் ஆஞ்சநேயா் கோயிலில் பஜனையை நிறைவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.