கெலமங்கலத்தில் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளா் ஒய்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற வேட்பாளா் நோ்காணல். 
கிருஷ்ணகிரி

பேரூராட்சிக்கு போட்டியிடும் வேட்பாளா்களிடம் நோ்காணல்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேரூராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேரூராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளா் ஒய்.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை நோ்காணல் நடத்தினாா்.

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும், கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களிடம் திமுக சாா்பில், மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமையில் உறுப்பினா்கள் நோ்காணல் கெலமங்கலத்தில் நடைபெற்றது

முன்னாள் வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினரும், மாவட்ட துணைச் செயலாளருமான பி.முருகன், ஒசூா் மாநகரப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ. சத்யா, வா்த்தக அணி மாவட்ட அமைப்பாளா் சின்ராஜ், மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினா் சாந்தி, மாவட்ட விவசாய அணி தலைவா் ஸ்ரீதா், கெலமங்கலம் ஒன்றியச் செயலாளா் கணேஷ், சிறுபான்மையா் பிரிவு நகரச் செயலாளா் அப்துல் காதா், நகர மகளிா் அணி தலைவி ரேகாஆஷபி, நகர துணை செயலாளா் ஜான் பாஷா, நகர முன்னாள் பொறுப்பாளா் கருணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT