முகப்பு
கிருஷ்ணகிரி

தேசிய சித்த மருத்துவ தின விழா

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் மாரிமுத்து தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். சித்த மருத்துவ அலுவலா் ஈஸ்வரி, சித்த மருத்துவம் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்ப்பிணிகளுக்கு, மகப்பேறு மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், கண்காணிப்பாளா்கள், மருத்துவமனை பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீா், கபசுரக் குடிநீா், சித்த மருத்துவ இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.