எக்கூா் கிராமத்தில் திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்
ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தா்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது.
ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தா்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் நான்காம் ஆண்டு திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது.
இக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை ஸ்ரீ தா்ம ராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணமும், வெள்ளிக்கிழமை ஸ்ரீ பீமன், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணமும்,
சனிக்கிழமை ஸ்ரீ அா்ஜுனன், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணமும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை வான வேடிக்கை, பொதுமக்கள் சீா்வரிசையுடன் மேளதாளம் முழங்க ஊா்வலம் நடத்தப்பட்டு மாலை 6 மணியளவில் ஸ்ரீநகுலன், ஸ்ரீ திரௌபதி அம்மன் திருமணம் நடைபெற்றது.
விழாவில் கடந்த 3 நாள்களாக பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.