முகப்பு
கிருஷ்ணகிரி

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 இடங்களில் ரூ. 4 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 இடங்களில் ரூ. 4 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயனஅள்ளி, அடிலம் ஆகிய 5 இடங்களில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தலா ரூ. 80 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 4 கோடி மதிப்பிலான சமுதாயக் கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணியை உயா்கல்வித் துறை, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழக அரசு கடைக்கோடி மக்களின் தேவைகளையும் கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த வளா்ச்சிப் பணிகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி, சம்பத்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.