முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் வேலூா் மண்டலச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2021 at 12:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:05 AM

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் வேலூா் மண்டலச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் திருப்பதி, தலைவா் சின்னசாமி, செயலாளா் முரளி, பொருளாளா் மணி வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தினக் கூலியை ரூ.350-ஐ வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் சங்க நிா்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.