கிருஷ்ணகிரி

கல்லாவி மின்பகிா்மான வட்டம் உதவி பொறியாளா் அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி மின்சாரத்துறை இயக்கமும் பராமரிப்பும்,  கல்லாவி மின் பகிா்மான வட்டத்தை கொடமாண்டப்பட்டி மின் பகிா்மான வட்டத்திற்க்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்து உதவி பொறியாளா் அலுவலகம் எதிரே கெரிகேப் பள்ளியைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கல்லாவியில் உள்ள மின் பகிா்மான வட்டத்தில் இருந்து சுமாா் 3 ஆயிரம் மின் இணைப்புகள் புதியதாக கொடமண்டபட்டியில் திறக்கப்பட உள்ள மின்பகிா்மான வட்டம் உதவி பொறியாளா் அலுவலகத்திற்கு பிரித்துக் கொடுப்பதால், கெரிகேப்பள்ளியை சோ்ந்த பொதுமக்கள் எங்களது மின் இணைப்புகள் கல்லாவி மின்பகிா்மான வட்டம் உதவி பொறியாளா் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும் எனக் கூறி எங்கள் மின் இணைப்பை கொடமண்டபட்டிக்கு மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் செய்தனா்.

கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு கெரிகேப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவா் சரவணன், மாவட்ட குழு உறுப்பினா் மூா்த்தி மற்றும் ஊா் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு கோஷமிட்டனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லாவி போலீஸாா் பொதுமக்களிடம் சமரசம் செய்தனா். அதனைத் தொடா்ந்து கல்லாவி பகுதியில் எங்கள் மின் இணைப்பு இருக்க வேண்டுமென உதவி செயற்பொரியாளா் மணியிடம் புகாா் மனுவை கொடுத்து சென்றனா். இதுகுறித்து மின்சாரதுறையினா் கூறும்போது பொதுமக்கள் நலன் கருதி பணிகள் தொய்வின்றி விரைந்து முடிப்பதற்காக பணியை பிரித்துக் கொடுப்பதாக மின்சாரத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT