கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் 63 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

DIN

ஒசூா் மாநகராட்சியில் 63 மையங்களில் போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போலியோ சொட்டு மருந்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு சத்துணவு மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் வழங்கப்பட்டது.

வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடக்கி வைத்தாா். ஒசூா் பேருந்து நிலையத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி தொடக்கி வைத்தாா்.

ஒசூா் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஆணையாளா் செந்தில்முருகன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தாா். தளி தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT