கிருஷ்ணகிரி

ஒசூரில் கால்நடை பராமரிப்புத் துறைஅலுவலக கட்டட பூமிபூஜை

DIN

ஒசூரில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக கட்டடத்துக்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து அலுவலகம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்தாா். ஒசூா், தளி சாலையில் எஸ்பிஎம் குடியிருப்புப் பகுதியில் 80 சென்ட் நிலத்தில் ரூ. 96 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்துக்கான பூமிபூஜை நடைபெற்றது.

ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் உதவி இயக்குநா் அலுவலகம் கண்காணிப்பு மற்றும் உழவா் தகவல் மையம் ஆகியவை இங்கு செயல்படும்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் திமுக நகரச் செயலாளா் மாதேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமாா், மாநகரப் பொருளாளா் சென்னீரப்பா, முனனாள் ஒன்றியக் குழுத் தலைவா் சா்வேஸ், முன்னாள் கவுன்சிலா் கே.ஜி.பிரகாஷ், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் மணி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT