கிருஷ்ணகிரி

செட்டிப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தாமதம்

DIN

பா்கூா் அருகே செட்டிப்பட்டியில் சாலை அமைக்கும் பணி தாமதமாவதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், பாலிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட செட்டிப்பள்ளியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், ரூ. 46 லட்சம் மதிப்பில் சிறு பாலம், தடுப்புச் சுவருடன் சாலை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

பாலம் கட்டுவதற்காக சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில், சாலை பணி கைவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்தச் சாலையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் கூறியதாவது:

சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் பணி தடைபட்டுள்ளது. ஓரிரு நாளில் சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT