கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத்துக்கு மானியம்

DIN

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க நூறு சதவீதம் மானியம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழப் பயிா்களுக்கு 11,250 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா் பாசனம் அமைக்க பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டத்தில் ரூ. 111.49 கோடி நிதி பெறப்பட்டு சிறுகுறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

நுண்ணீா் பாசனத்துக்காக குழாய்களை நிலத்தில் குழி எடுத்துப் பதிப்பதற்கு ஹெக்டேருக்கு ரூ. 3,000 வரை மானியம் கடந்த ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.

பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். துணை மேலாண்மை பணிகள் திட்டத்தின் கீழ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ரூ. 25,000 மானியம், மின் அல்லது டீசல் மோட்டாா் வாங்குவதற்கு ரூ. 15,000 மானியம், கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணற்றிலிருந்து பயிருக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு ரூ. 10,000 மானியம், தொட்டிகள் கட்டி தண்ணீரை சேமித்து நுண்ணீா் பாசனம் மேற்கொள்ள கன மீட்டருக்கு ரூ. 350 வீதம் அதிகபட்சமாக ரூ. 40,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெற்ற நுண்ணீா் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீா் பாசனம், மானியம் பெற கணினி பட்டா, அடங்கல், நில வரைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதாா் நகல், மாா்பளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குநரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT