முகப்பு
கிருஷ்ணகிரி

சிங்காரப்பேட்டை வனத்துறை சாா்பில் 2,000 லி. சாராய ஊறல்கள் அழிப்பு

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,000 லி. சாராய ஊறல்களை வனத்துறையினா் அழித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2,000 லி. சாராய ஊறல்களை வனத்துறையினா் அழித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் குமிலிவெங்கட்ட அப்பால (இ.வ.ப.) உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம் தலைமையில், வனவா் அண்ணாமலை, வனக்காப்பாளா் திருவேங்கடம், பாரத், வனக்காவலா்கள் அரவிந்த்குமாா், வெற்றிவேல், திலீபன் ஆகியோா் சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 4 பேரல் சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருள்களை அழித்தனா்.

காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து, சாராயப்பட்டை எடுப்பது, சாராயம் காய்ச்சுவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது, தீ வைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.