கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:ஒரேநாளில் கரோனாவுக்கு 10 போ் பலி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனா தொற்றால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 62, 67, 38, 74, 69, 50 வயது கொண்ட ஆண்களும், 67 வயது மூதாட்டி ஆகிய 7 போ் உயிரிழந்தனா்.

மேலும், ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 53 வயது ஆண், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கரோனாவுக்கு 298 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்த 672 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மாவட்டத்தில் 36,342 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 33,526 போ் குணமடைந்துள்ளனா். 2,560 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT