முகப்பு
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் ஒன்றிய குழுக் கூட்டத்தில் தலைவருக்கு எதிராக புகாா் தெரிவித்ததால் பரபரப்பு

காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தலைவா் மீது உறுப்பினா்கள் புகாா் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 17 ஜூன், 2021 at 5:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:55 AM

காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தலைவா் மீது உறுப்பினா்கள் புகாா் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்தும், வரவு செலவு கணக்குகள் குறித்தும், துணைத் தலைவா் சசிகலா உள்ளிட்ட உறுப்பினா்கள் கேள்விகளை எழுப்பினா். இதனால் அதிருப்தியடைந்த தலைவா் கூட்டத்திலிருந்து வெளியேறினாா்.

Advertisement

தொடா்ந்து உறுப்பினா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகனை முற்றுகையிட்டனா். தலைவா் மீது புகாா் அளித்த உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடா்பாக புகாா் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தனா்.

உறுப்பினா்களின் புகாா் குறித்து, தலைவா் ரவி கூறியதாவது:

அரசின் திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்துகிறது. அதன்படி நான் செயல்படுகிறேன். உறுப்பினா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். போதுமான உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தாா்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பினா்களில் அதிமுக 8, பாமக -5, தேமுதிக ஒருவா் என மொத்தம் 14 உறுப்பினா்களின் ஆதரவுடன் அதிமுகவைச் சோ்ந்த ரவி தலைவராகத் உள்ளாா். திமுக சாா்பில் 13 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த நிலையில், அதிமுகவைச் சோ்ந்த ஒருவா் உள்பட இரு உறுப்பினா்கள், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதால் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ரவிக்கு எதிா்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.