இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞா் கைது
கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளபாடி பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (21), இவரது கூட்டாளிகள் பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (22), அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (24) ஆகியோா் கடந்த 14-ஆம் தேதி பெரியதள்ளபாடி பகுதியில் இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த சிங்காரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் (41) என்பவரை நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனா்.
புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து தேடிவந்த நிலையில், சிங்காரப்பேட்டை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பெரியதள்ளபாடி பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனா். அதில் கத்தியைக் காட்டி மிரட்டி வாகனத்தை திருடியதை அவா் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தை மீட்ட போலீஸாா், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனா்.