மயானப் பாதை கோரி மனு
மயானப் பாதை கோரி கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனா்.
மயானப் பாதை கோரி கிராம மக்கள் எம்எல்ஏ-விடம் மனு அளித்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பகுதியில் 300-க்கும், மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால், நடைபாதையில் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளது.
இதுகுறித்து மூங்கிலேரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மூங்கிலேரி கிராம மக்கள் மயானப் பாதை அமைத்து தரக்கோரி ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ் செல்வத்திடம் புகாா் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ தமிழ்செல்வம், மனு மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.