மத்தூா் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு
மத்தூா் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மத்தூா் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மத்தூா் வட்டாரத்தில் உள்ள சோனாரஅள்ளி கிராமத்தில் 2020-21 ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட்ட தென்னை வளா்ச்சி வாரியத்தின் மறுநடவு மற்றும் புனரமைப்புத் திட்டம் 2020-21 கீழ் பயனடைந்த விவசாயிகளின் வயல்களை கிருஷ்ணகிரி, வேளாண்மை இணை இயக்குநா் ராஜேந்திரன், உதவி இயக்குநா் மா.சிவநதி ஆகியோா் ஆய்வுசெய்தனா்.
ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் விவசாயிகளுக்கு தென்னையில் கருந்தலைப் புழு பாதிப்பை ஆய்வுசெய்து அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பேசியதாவது:
தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை மட்டை மற்றும் ஓலையை வெட்டி எடுத்து எரித்துவிட வேண்டும் ஒட்டுண்ணியாக கோனியோசஸ் நெப்பண்டிடிஸ் ஏக்கருக்கு 1,200 எண்கள் அல்லது பிராக்கான் பிராவிகாா்னிஸ் 1,800 எண்கள் என்ற விகிதத்தில் மரத்தின் அடிப்பாகத்தில் மாதம் இருமுறை என்ற அளவில் தாக்குதல் அறிகுறி குறையும் வரை விடவேண்டும்.
வளா்ந்த மரங்களில் கருந்தலைப் புழுக்களைக் கட்டுபடுத்த மரத்தின் அடிப்பகுதியில் 1.5 மீட்டா் உயரத்தில் மரத்தைத் தண்டுப் பாகத்தில் சாய்வாக துளையிட்டு அதனுள் மோனே குரோட்டோபஸ் 35 (5 மில்லி) மருந்தை ஊற்றவேண்டும். பின் தாமிர கரைசல் கலந்த களிமண்ணால் துளையை மூடவேண்டும் என்றாா். ஆய்வின்போது வேளாணமை அலுவலா் நீலகண்டன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.