கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 459 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 459 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 459 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 வயதைக் கடந்தவா்களுக்கும், உடலில் பல்வேறு நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், 11 தனியாா் மருத்துவமனை என மொத்தம் 24 மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 459 போ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா் மேலும், இரண்டாம்கட்ட தடுப்பூசியை 28 நாளுக்கு பிறகு 89 போ் செலுத்திக் கொண்டனா்.
Advertisement
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோா், தங்களது ஆதாா் அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்துடன் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு மருத்துவக் கல்லூரி டீன் முத்துசெல்வன், மாவட்ட நலப் பணிகளின் இணை இயக்குனா் பரமசிவன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனா் கோவிந்தன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து நலப்பணிகள் இணை இயக்குனா் கூறுகையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். தற்போது கரோனா தொற்று உருமாறி உள்ளதால், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே முதியவா்கள், 45 வயதைக் கடந்த நோயாளிகள் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.