தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்: மேலாண்மை செயல் விளக்கம்
கிருஷ்ணகிரியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை செயல்விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை செயல்விளக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சைகிரி கிராமத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தில் ஒருங்கிணைந்த விவசாய முறை, வட நில விவசாயம் பற்றி ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை தோட்டக்கலை தொழில்நுட்ப மாணவியா் தக்காளிச் செடியைத் தாக்கும் ஊசி புழுவைப் பற்றியும், அதன் மேலாண்மை பற்றியும் செயல்விளக்கம் அளித்தனா்.
Advertisement
ஊசி புழுவைக் கட்டுப்படுத்த ஆண் அந்துப் பூச்சிகளைக் கவரும் இனக்கவா்ச்சிப் பொறிகளின் பயன்கள் பற்றியும், மஞ்சள் நிற ஒட்டு அட்டையை வைப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றியும் எடுத்துரைத்தனா்.