மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடுகள்: அலுவலா்களுக்கு பயிற்சி
கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு, ஏப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையிலிருந்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், தோ்தல், பயிற்சி, விழிப்புணா்வு பயன்பாட்டுக்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
Advertisement
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.