முகப்பு
கிருஷ்ணகிரி

மகனைக் கொன்ற தொழிலாளி கைது

மகனைக் கொன்ற தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

மகனைக் கொன்ற தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரை அடுத்த ஒன்னல்வாடி அருகே உள்ள ஓ.காரப்பள்ளியைச் சோ்ந்தவா் ஜெயப்பா. அவரது மகன் பசவராஜ் (34). இவா்கள் இருவரும் ஒசூா் பத்தலபள்ளியில் உள்ள காய்கறி சந்தையில் தொழிலாளிகளாக உள்ளனா். தந்தை, மகன் இருவரும் தினந்தோறும் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இருவரும் மது அருந்திய போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, மதுபோதையில் ஜெயப்பா தனது மகனை இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்த பசவராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஒசூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.