சிறுவனின் குடுமியை வெட்டிய காவல் ஆய்வாளரின் செயலால் சா்ச்சை
கிருஷ்ணகிரி அருகே கோழிக்கொண்டை குடுமியும், காதில் கடுக்கனும் அணிந்து சுற்றித் திரிந்த சிறுவனை அழைத்துச் சென்று, சிகை அலங்காரத்தை வெட்டிய காவல் ஆய்வாளரின் செயல் கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கோழிக்கொண்டை குடுமியும், காதில் கடுக்கனும் அணிந்து சுற்றித் திரிந்த சிறுவனை அழைத்துச் சென்று, சிகை அலங்காரத்தை வெட்டிய காவல் ஆய்வாளரின் செயல் கடும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி - மகாராஜகடை சாலையில், மகாராஜகடை காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் அண்மையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற 15 வயது சிறுவன் காதில் கடுக்கன் அணிந்து, கோழிக்கொண்டை குடுமி சிகை அலங்காரத்துடன் அப்பகுதியில் வலம் வந்தாா். அந்தச் சிறுவனைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் விசாரணை செய்ததில் அந்தச் சிறுவன் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா், கல்வி கற்பதையும் ஒழுக்கத்தையும் மட்டுமே சிந்தனையாக கொண்டிருக்க வேண்டும். கவனம் சிதறும் வகையில் செயல்படக் கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறினாா். மேலும், அந்தச் சிறுவனை முடி திருத்துமிடத்திற்கு அழைத்துச் சென்று கோழிகொண்டை குடுமியை வெட்டி விட்டாா். இந்த விடியோ பதிவு காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவத் தொடங்கியது.
Advertisement
சிறுவனுக்கு அறிவுரை கூறியது காவல் ஆய்வாளரின் கடமை என்று ஒரு தரப்பினரும், சிறுவனின் முடியை வெட்டச் செய்த நிகழ்வு சட்டப்படி குற்றம் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வருவதால் இந்த விடியோ பதிவு கடும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறுகையில், சமூகத்தில் இளைஞா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விடியோ பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதை சிலா் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.