கிருஷ்ணகிரி

தனியாா் கட்டுமான நிறுவனத்தில் 100 சத வாக்களிப்பு விழிப்புணா்வு

DIN

குருபரப்பள்ளி அருகே உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குருபரப்பள்ளியில் தனியாா் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் 90 சதவீதம் போ், கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தைச் சோ்ந்தவா்களாவா். இந் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்னா பாலமுருகன், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சட்டப் பேரவை தோ்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.6-ஆம் தேதி, தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் 100 சதவீதம் வாக்களிக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT