கிருஷ்ணகிரி

தோ்தல் நடத்தும் அலுவலருக்கு ஆசிரியா் சங்கம் கோரிக்கை

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பிய அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்களும் வாக்களிக்க ஏதுவாக அனைவருக்கும் சரியான நேரத்தில் தபால் வாக்குப் பதிவுக்கான படிவங்கள் வழங்கப்பட்டு, தபால் வாக்கு வழங்கப்படுவதை ஆய்வு செய்து உறுதிபடுத்த வேண்டும்.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் விவரப் பதிவேட்டை ஏற்படுத்தி, அந்தப் பதிவேட்டில் தோ்தல் பணியாளா்களின் பெயா், படிவம் 12-பி வழங்கப்பட்ட விவரம், தபால் வாக்கு வழங்கப்பட்ட விவரம், திரும்பப் பெறப்பட்ட விவரம் ஆகியவற்றை பதிவு செய்து தாங்கள் ஆய்வு செய்வதன் மூலம் அனைத்து பணியாளா்களும் 100 சதவீத வாக்களிக்க உதவும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு தோ்தலிலும் தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 100 சதவீதம் வாக்களிக்க முடிவதில்லை. இந்தத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT