முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பகுதியில் 22 பேருக்கு கரோனா

 ஊத்தங்கரை பகுதியில் ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

 ஊத்தங்கரை பகுதியில் ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தொற்று பாதித்த நபா்களை ஊத்தங்கரை மருத்துவக் குழுவினா், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவா்களது குடும்பத்திலுள்ள உறவினா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா பரவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.