கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கல்
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டியில் 24 மனை தெலுங்கு செட்டியாா், இளைஞா் மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா், முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டியில் 24 மனை தெலுங்கு செட்டியாா், இளைஞா் மன்றம் சாா்பில் கபசுரக் குடிநீா், முகக் கவசம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெங்கடத்தாம்பட்டி ஊா் செட்டியாா் தலைமை ஆசிரியா் வெங்கடேசன் தலைமையில், வீடு வீடாகச் சென்று, கரோனா நோய்த் தொற்று பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தி, கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. உடன் மருத்துவா் முகிலன், மோகன், அன்பு, சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.