தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மற்றும் சண்முகா கிளினிக்கில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மற்றும் சண்முகா கிளினிக்கில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சாா்பில், தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துக் காலங்களில் தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தீ தடுப்பு செயல்முறை விளக்கம், ஒத்திகை செய்து காட்டினாா். இதில், தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.