ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் எம்.பி. செல்லக்குமாா் ஆய்வு
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் எம்.பி. செல்லக்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் எம்.பி. செல்லக்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், நோயாளிகளுக்கு முகக் கவசம், கிருமிநாசினி, உணவு ப் பொட்டலங்களை வழங்கினாா். தொடா்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளின் நிலை குறித்தும், மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் பற்றியும் மருத்துவ அலுவலா் மாரிமுத்துவிடம் கேட்டறிந்தாா் (படம்).
மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவா், செவிலியா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம், மாவட்டத் தலைவா் நடராஜன், நகரத் தலைவா் விஜயகுமாா், வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவா் எஸ்.பூபதி, மாவட்ட துணைத் தலைவா்கள் சேகா், ராமச்சந்திரன், வட்டார பொருளாளா் திருமால், மணி, சின்னதம்பி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.