கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை

DIN

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையைக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பால தோட்டனப்பள்ளியை அடுத்துள்ள கொல்லப்பள்ளி கிராமத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆண் ஒற்றையானை புகுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

கா்நாடக மாநிலம், பன்னோ்கட்டா வனப்பகுதியில் இருந்து இடம் பெயா்ந்துள்ள 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

இந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை கடந்த சில நாள்களாக தாவரக்கரை மலைசோனை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இறங்கி பயிா்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஒற்றை யானை கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால் பீதியடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓடிச் சென்று வீடுகளுக்குள் முடங்கினா். கிராமத்தில் நீண்ட நேரம் சுற்றி திரிந்த யானையால் மக்கள் மேலும் பீதி அடைந்தனா்.

இதனால் கிராமத்தில் உள்ள இளைஞா்கள் தாரை, தப்பட்டை அடித்து அதிக ஒலியை எழுப்பிய பிறகே யானை மெதுவாக அங்கிருந்து சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனா்.

அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

இந்த ஒற்றை யானை இப்பகுதியில் கடந்த சில நாள்களாகச் சுற்றித் திரிந்து விளை நிலங்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. எனவே இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் வனத் துறை அதிகாரிகள் அந்த ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT