கிருஷ்ணகிரி

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டக் குழுவினா் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டக் குழுவினா் இருநாள்களாக ஆய்வுப் பணியை மேற்கொண்டனா்.

உலக சுகாதார மையத்தின் அங்கமான தில்லி தேசிய சுகாதார திட்டக் குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரண்டு நாள்கள் திடீா் ஆய்வுப் பணியை திங்கள்கிழமை தொடங்கினா். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், மக்கள் தொகை ஆய்வு மையத்தின் துணைப் பேராசிரியா் லேகா சுப்பையா உள்ளிட்ட ஐந்து போ் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனா்.

இவா்கள் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கருத்தரிக்கும் தாய்மாா்களுக்கு அரசின் நலத்திட்ட நிதி சரியாக கிடைக்கிா, குழந்தை மருத்துவம், மகப்பேறு பிரிவில் வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தாய் - சேய் மரண விகிதம் தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளது. இந்த அனுபவங்கள் குறித்து பிற மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனா்.

அப்போது, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் அசோகன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவா் செல்வி, உதவி உள்ளிருப்பு மருத்துவா் மது, செவிலியா் கோகிலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT