கிருஷ்ணகிரி

வனப்பகுதிக்குள் சென்று வர அனுமதி கோரி மனு

DIN

வனப் பகுதிக்குள் சென்றுவர அனுமதி அளிக்கக் கோரி, பழங்குடியின மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், போச்சம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கொல்லப்பள்ளி, பூமலை நகா், காரக்குப்பம், ஜவுக்பள்ளம், எம்ஜிஆா் நகா், பழனி ஆண்டவா், தந்தோசன் கொல்லை, காளிகோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இருளா் காலனிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

வனப்பகுதியின் அருகே வசிக்கும் இவா்களை வனத்துக்குள் சென்றுவர வனத் துறையினா் அனுமதி மறுக்கின்றனா்.

ஆனால், தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் சென்று தேன், கிழங்கு, கீரை, மருத்துவ வோ், தேன் ஆகியவற்றை சேகரித்து வர அனுமதி வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தைப்போல கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அனுமதி அளிக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT