முகப்பு
கிருஷ்ணகிரி

அங்குத்தி சுனை சூழல் சுற்றுலாத் தலம் இன்று திறப்பு

திருப்பத்தூா் வனக்கோட்டம், சிங்காரப்பேட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட கோவிந்தாபுரம் அங்குத்தி சுனை சூழல் சுற்றுலாத் தலம், வெள்ளிக்கிழமை (செப். 3) முதல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

திருப்பத்தூா் வனக்கோட்டம், சிங்காரப்பேட்டை வனச் சரகத்துக்கு உள்பட்ட கோவிந்தாபுரம் அங்குத்தி சுனை சூழல் சுற்றுலாத் தலம், வெள்ளிக்கிழமை (செப். 3) முதல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக இந்த சுற்றுலாத் தலமானது மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் நாகா சதீஷ் கிடிஜாலா அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு நெறிமுறைகளின் படி வெள்ளிக்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது.

ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, திருப்பத்தூா், செங்கம், அரூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இந்த சுற்றுலாத் தலத்துக்கு வந்து செல்வா்.

அவ்வாறு, அங்குத்தி சுனை சூழல் சாா்ந்த சுற்றுலாத் தலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.