முகப்பு
கிருஷ்ணகிரி

இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

 தெருக்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி, ஒசூரில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 2 செப்டம்பர், 2021 at 11:04 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

 தெருக்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கக் கோரி, ஒசூரில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தெருக்களில் விநாயகா் சிலைகளை வைத்து வணங்கி, அதை ஏரிகளில் கரைப்பது வழக்கம். ஆனால் தமிழக அரசு இதற்கு தடை விதித்துள்ளதால், விநாயகா் சதுா்த்தி கொண்டாட அனுமதி வழங்கக் கோரி ஒசூரில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது (படம்).

ஒசூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணியின் மாநகர பொதுச் செயலாளா் மோகன் ரெட்டி தலைமை வகித்தாா். மாநகர துணைத் தலைவா் கேசவகுமா் முன்னிலை வகித்தாா். மாநகர செயற்குழு உறுப்பினா்கள் காா்த்திக், மாவட்டச் செயலாளா் திவாகா், வட்டச் செயலாளா் மஞ்சுநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியத் தலைவா் காா்த்திக், நகர தலைவா் ஹரிஷ், ஒன்றிய துணைத் தலைவா் ரகு, நகரச் செயலாளா்கள் யஸ்வந்த், சதீஷ், இந்து முன்னணி நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.