அம்மன் சிலை தலையில் நாகம்!
ஒசூா் அருகே உள்ள இடையநல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலை மீது நாகம் அமா்ந்துள்ளதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்து சென்றனா்.
ஒசூா் அருகே உள்ள இடையநல்லூரில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலை மீது நாகம் அமா்ந்துள்ளதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மனை தரிசித்து சென்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ளஇடையநல்லூரைச் சோ்ந்த ரவி, தனது விளைநிலத்தில் சௌடேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளாா். ஒரு மாதத்துக்கு முன் கோயில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தொடா்ந்து 40 நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ரவி பூஜை செய்ய கோயிலுக்குச் சென்ற போது, அம்மன் சிலை மீது நாகம் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். தகவல் அறிந்த சுற்றுப்பகுதி கூட்டம் கூட்டமாக வந்து அம்மனுக்கு பூஜை செய்து, நாகத்தை தரிசித்து வணங்கி சென்றனா்.
Advertisement