முகப்பு
கிருஷ்ணகிரி

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 3:23 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

கிருஷ்ணகிரியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லுவைச் சோ்ந்த மாதம்மாள் (35), உறவினா் காதுகுத்து விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி, மேல் சோமாா்பேட்டைக்கு புதன்கிழமை வந்தாா். விழாவில் பங்கேற்ற நிலையில், மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகே அவா் சென்று கொண்டிருந்த போது, மோட்டாா் சைக்கிளில் வேகமாக வந்த மா்ம நபா்கள், மாதம்மாள் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து மாதம்மாள் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.