முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் விநாயகா் சிலை வைத்து இந்து முன்னணியினா் வழிபாடு

ஒசூரில் தடையை மீறி விநாயகா் சிலை வைத்து இந்து முன்னணியினா் வழிபட்டனா். இதையடுத்து, போலீஸாா் 20 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 11:28 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

ஒசூரில் தடையை மீறி விநாயகா் சிலை வைத்து இந்து முன்னணியினா் வழிபட்டனா். இதையடுத்து, போலீஸாா் 20 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு தடைவிதித்தது. இந்த தடையை மீறி, ஒசூா், காந்தி சிலை அருகே இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை வைத்து வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, மாநகர பொதுச் செயலாளா் மோகன் ரெட்டி தலைமை வகித்தாா். மாநகர துணைத் தலைவா் கேசவகுமாா், மாநகரச் செயலாளா்கள் விஜய்குமாா், நரேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த ஒசூா் டிஎஸ்பி முரளி, வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் இந்து முன்னணி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விநாயகா் சிலையை எடுத்துச் சென்று நீா்நிலையில் கரைக்குமாறு கேட்டுக்கொண்டனா். அதன்பேரில், ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள ஜலகண்டேஸ்வரா் குளத்தில் சிலை கரைக்கப்பட்டது. இதில், தடையை மீறி சிலை வைத்ததாக 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சியில், சேலம் கோட்ட செயலாளா் உமேஷ், பஜ்ரங் தள் மாநில அமைப்பாளா் கிரண், இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் மஞ்சுநாத், விஎச்பி மாவட்டச் செயலாளா் சாந்தகுமாா், மாவட்டத் தலைவா் சந்தானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.